Monday, June 23, 2008

காதல் ரதி



பூக்களில் அமர்ந்து
அதற்கு
சிறகு தர முயற்சி செய்கிறது
இவள் ஸ்பரிசம்
பூ பறிக்கும்போதெல்லாம்..!

வைரபாரதி

Thursday, May 15, 2008

காதலோ காதல்


காதலுக்காக யாரும் காத்திருக்க தேவை இல்லை

காத்திருப்பதே காதலாகி விட்டால்....

வைரபாரதி முத்திரை


கண்கள் இதயமாகும் போது தான்
இதயத்தால் கண்களாக முடியும்

Saturday, March 8, 2008

வைரபாரதி காதல் கவிதைகள்


காதலே...
சிலையாகவும் சிற்பியாகவும்
ஒரே நேரத்தில் எப்படி உன்னால்
என்னை மாற்றி விட முடிகிறது ?


இதயத்தை

எழுத்துக்களாக செய்யும் போது

எதிர் திசையில் நீ

வருவதற்கான வாசனை சுவடுகள் !!


சிறகால் கூடு செய்து

அதில் தங்க சொல்கிறது

உன் காதல் !!


ஆஹா தூரிகையாகிறது உன் நிழல்

ஓவியமாக நீ அசைந்து வருகையில் ....


முத்தங்களுக்கு உதடுகள்

தேவைப்படும்போதெல்லாம்

அமுதம் சிந்துகிறது

உன் அழகு ..!


கவி வைரபாரதி